Breaking News

பான் கீ மூன், விக்னேஸ்வரனை இன்று சந்திக்கிறார்



ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பான் கீ மூனுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைக்கான நேரசூசியில் விக்னேஸ்வரனின் பெயர் உள்ளடங்க வில்லையென்ற குழப்ப நிலையொன்று காணப்பட்டது.

பான் கீ மூன் வட மாகாண முதலமைச்சரைச் சந்திக்கும் போது வட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.