தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார்
ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்த்தார்.
தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்ட கை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் நேற்று (1) வியாழக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும், திருச்சபைக்காகவும், நாட்டி ற்காகவும் அரும் பணி ஆற்றியுள்ளார். ஆயர் அவர்களுடன் கடந்த 9 வருட ங்க ளாக இருப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. முக்கியமான கால கட்டத்தில் நான் அவருடன் கூட இருந்திருக்கின்றேன்.
சமைய சூழ் நிலைகளை பொறுத்தவரையில் அவர் மறைமாவட்டத்தின் ஆயர். இரண்டு மாவட்டங்களுக்கு அவர் ஆயராக இருந்தார். கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு அவர் பொறுப்பாக இருந்தார்.பல விதமான ஆன்மீக முன்னேற்றத்திட்டங்கள் அவருடைய காலத்தில் எடுக்கப்பட்டது.
அதை விட மேலாக அவர் ஆற்றிய பல்வேறு பணிகளை நாங்கள் இந்த நூலிலே பார்க்கின்றோம். மிகவும் சிறப்பாக சொல்லப்போனால் தமிழ் மக்களின் வாழ்விலே அவர் பின்னிப்பிணைந்தவராக அவரின் உரிமைப்போராட்டத்திலேயே அவர் இரண்டற கலந்தவராக இருந்திருக்கின்றார்.அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.
சர்வதேச சமூகமே அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதைத்தான் அவர் அடி க்கடி செல்லியிருக்கின்றார். நாங்களும் சொல்லி இருக்கின்றோம். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார்.இதனை பலர் பலவிதமாக புரிந்து கொண்ட தும் நமக்கு தெரியும்.
சர்வதேச மட்டத்திற்கு அவரின் குரல் சென்றது என்றால் தமிழ் மக்கள் கௌர வமான,நீதியான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலே அவர் விடா ப்பிடியாக இருந்தார். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவர் அரும் பாடுபட்டார்.மக்களின் குறைகளை,மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கிடைக்கின்ற சந்தர்ப்ப ங்களை பயன்படுத்தி வெளிப்படுத்தினார்.
இலங்கையில் என்றால் என்ன சர்வதேசம் என்றால் என்ன மக்களுக்கு இழைக்க ப்பட்ட அநீதிகளை எடுத்தியங்கி நீதி கிடைக்கவேண்டும்,தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பிரச்சினைகள் நடந்த கால கட்டத்தில் ஆயர் அவர்கள் யுத்தம் இடம்பெற்ற இடமாக இருந்தால் என்ன, தனது அலுவலகத்தில் இருந்தால் என்ன அவருடைய குரல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே சென்றது.
படகுத்துறையிலே விமானத்தாக்குதல் இடம்பெற்ற பொழுது தனது அலுவல கத்தில் இருந்து கொண்டு சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கூறினார் அப்பாவி மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள் என்று.அப்போது அவ ர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் ஆயர் அவர்கள் நீங்கள் இதை செய்வது பிழை என சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் தொடர்ந்து சொன்னார். அப்பாவி மக்களை கொன்றுவிட்டு நீங்கள் பெருமிதம் அடைய வேண்டாம் என்று கூறினார்.அவர் உரிமைக்காகவும் மக்கள் சார்பாகவும் நின்று பேசிய ஓர் தன்மை யை காட்டுகின்றது.
இவ்வாறு அவருடைய வாழ்க்கையிலே பல சம்பவங்களை சுட்டிக்காட்டக்கூடிய வகையில் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் அவற்றை தொகுத்து ஒரு நூல் வடிவிலே கொண்டு வந்துள்ளார். ஆயர் அவர்கள் ஆரம்பித்த பல்வேறு நலத்திட்டங்களை நான் அறிவேன்.அது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கஸ்டப்பட்ட நொந்து போயுள்ள யாராக இருந்தா லும் தன்னிடம் வருகின்றவர்களுக்கு இல்லை என்று சொல்லது அவர்களுடைய குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கின்ற ஓர் ஆயராக வாழும் நாயகனாக இருந்தார் என்பதனை கூறும் வகையில் இந்த நூல் சுட்டி க்காட்டுகின்றது.
எனவே தமிழ் சமூகம் ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.