விரைவில் புதிய கட்சி, புதிய அரசாங்கம்- பசில்
விரைவில் புதிய கட்சியுடன் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அடித்தளமாகவுள்ள உள்ளுராட்சி சபைக்கான சிறிய தேர்தலை நடாத்த இடமளிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்கின்றோம். இதற்கு, ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டும்.
ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் புதிய கட்சி அமைப்பது தொடர்பில் வினவியபோதே இதனைக் கூறினார்.
மலேசியாவில் உயர் ஸ்தானிகர் ஒருவர் தாக்கப்பட்டமையானது இந்த அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.