வீதியில் பயணித்த ரயில் : யாழில் சம்பவம்
யாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில், தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உத்தரதேவி கடுகதி ரயில் இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு பயணித்த போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்டவாள தடுப்புக்கள் செயலிழந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த விபத்தினால் உயிரச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான ரயிலின் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.