Breaking News

‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6 வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்

சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.

இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 1,50,000 பேர் இந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

இந்த வீடியோ நீங்களும் காணுங்கள்....