உங்களால் இச்சபையில் அமர்ந்திருக்க முடியாது : கம்மன்பிலவிடம் பிரதமர் தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களால் இச்சபையில் அமர்ந்திருக்க முடியாது என சபையில் உதயகம்மன்பில எம்.பிக்கு தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக் கேள்வியை சபாநாயகர் கருஜயசூரியவிடமும் பிரதமர் முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமர் பதில் வழங்கும் நேரத்தின் போதே உதய கம்மன்பில எம்.பி. கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைநடுவில் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்க முடியாது என உதய கம்மன்பில சபையில் தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு அம் முன்னணியின் எம்.பியாக இச் சபையில் அமர முடியாது.
எப்படி நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும். சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.