பிலிப்பைன்ஸ் அதிபரின் சொந்த ஊரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற பெரும் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம், டஜன் கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவின் சொந்த நகரான தாவாரோவில் மக்கள் நெரிசல் மிகுந்த இரவு சந்தையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தெருக்களில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடப்பதையும், உணவக நாற்காலிகள் தாறுமாறாகக் கிடப்பதையும் காண முடிகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாக இனம் காணப்படவில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, அதிபர் டுடெர்டோ தாவாரோவில் இருந்தாலும், இந்த குண்டுவெடிப்பால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.