Breaking News

வடக்கில் மீண்டும் யுத்த சூழல்? மூன் எச்சரிக்கை



வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரேயுடன் நடந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்றவற்றில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறில்லாத நிலையில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயமாகி விடும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் , இலங்கையில் இரண்டு இனங்களுக்கும் இடையில் சந்தேக மனப்பான்மை நிலவுவதே இப்போதைய பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம்.

சனத்தொகை வளர்ச்சி ஊடாக தாம் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் பெரும்பான்மை மக்களுக்கும், தங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதன் ஊடாக தமது வாழ்விடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் சிறுபான்மை மக்களுக்கும் இருப்பதாகவும் பான் கீ மூனுக்கு எடுத்து விளக்கியதாகவும் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.