Breaking News

மாநாட்டின் பின்னர் அதிரடி - கூட்டு எதிர்க் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன்?



கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஒரு குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ள தாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்கள், பண்டாரநாயக்கவின் கொள்கையை விமர்சனம் செய்ததனால் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, இக்குழுவினர் இவ்வாறு சேர்ந்து கொள்வதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள மேலும் சில ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்களில் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படாதவர்கள், கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.