உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காதது ஏன் எனவும் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.