Breaking News

பாங்கி மூனிடம் மகஜரை கையளிக்கிறது தமிழ் தேசியக்கூட்டமைப்பு



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடனான சந்திப்பில் விஷேட மகஜர் ஒன்றை கையளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பான் கீ மூன் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதன்படி, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் தீர்வு, மனித உரிமை மீறல்கள் மற்றும் வடக்கின் தற்போதைய நிலை தொடர்பிலும் இந்த மகஜரில் உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதுடன்,அதில், பான் கீ மூனின் விஜயம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.