Breaking News

யாழ். முஸ்லிம்களின் மகஜர் பான் கீ மூன் இற்கு கையளிப்பு



இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேள பிரதிநிதிகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்த மகஜர் ஒன்றை ஆளுநர் ஊடாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்னுக்கு வழங்கியுள்ளனர்.