Breaking News

கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதம்




கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், காணமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.