வீமன்காமத்தில் பான் கீ மூன் – மீளக்குடியேறிய மக்களை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வட மாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதையடுத்து, வலி.வடக்கில் வீமன்காமம் பகுதிக்குச் சென்று அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அங்கு புதிதாக கட்டப்படும் வீடுகளையும் பார்வையிட்டார்.