கடந்த 20 மாதங்களில் 777 படுகொலைகள் – வடக்கில் 43 கொலைகள்
நாடு முழுவதிலும் கடந்த 20 மாதங்களில் 777 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 218 கொலைகள் இடம்பெற்றுள்ளதாவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான நேரத்தின் போது டளஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சினால் இந்த விடங்கள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
குறிப்பாக ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2016 ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் இந்த கொலைகள் பதிவாகியிருப்பதாகவும் இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் 96 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 443 கொலைச்சம்பவங்களும் இதில் மேல் மாகாணத்தில் மாத்திம் 128 கொலைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 2015 ஜனவரி முதல் 2016 ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரையில் 334 கொலைகளும், மேல் மாகாணத்தில் 90 கொலைகளும் பதிவாகியுள்ளன.
அநுராதபுரத்தில் 32 கொலைச்சம்பவங்களும் அம்பாறையில் 24 கொலைகளும் பதுளையில் 14 சம்பவங்களும் மட்டக்களப்பில் 18 கொலைகளும் பண்டாரவளையில் 15 கொலைச்சம்பவங்களும் வடகொழும்பில் 13 கொலைகளும் தென்கொழும்பில் 9 கொலைகளும் மத்தியகொழும்பில் 9 கொலைச்சம்பவங்களும் எம்பிலிபிட்டியில் 51 கொலைகளும் இரத்தினபுரியில் 46 கொலைகளும் கம்பஹாவில் 33 கொலைச்சம்பவங்களும் தங்காலையில் 37 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, வடமாகாணத்தில் 43 கொலைகளும் கிழக்கு மாகாணத்தில் 53 கொலைகளும் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதிலும் 82 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இதனுடைய குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு 402 கொலைகளும் 2014 இல் 391 கொலைகளும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.