Breaking News

மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்



ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இந்த இன்று நண்பகல் ஒரு மணியளவில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.