அக்கினி அருந்ததிக்கு பதில் புலிகளின் தலைவரே சாட்சி!
புலிகளின் தலைவரின் உருவம் பதிக்கப்பட்ட தாலியை மணமகள் மீராவின் கழுத்தில் மணமகன் கார்த்திக் கட்டிய, பின்னர் மணமக்கள் இருவரும் பிரபாகரனின் சிலை முன்பாக நின்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்ட திருமணம் கனடாவில் நடந்தது.
அதே போல் பிரேம் – திவ்யாவின் புதுமை திருமணம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் ஐயர் இல்லை மந்திரமும் இல்லை அக்கினி அருந்ததிக்கு பதில் புலிகளின் தலைவரை சாட்சியாக வைத்து திருமணம் நிறைவேறியுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரின் உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு முன் நின்று அவரையே சாட்சியாக வைத்து இந்த மணமக்கள் தமது மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
இப்படியும் வாழ்வது தமிழ் இனத்திற்கு பெருமை. அது மட்டுமா புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பலர் வெறுக்க சிலர் ஒதுங்க, இந்தப் பாரினில் தமிழ்ச் செல்வங்கள் வாழ்வது மண்ணில் விதையான மாவீரர்களுக்கு நிம்மதி என திருமணத்திற்கு வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.