பதவி அகற்றப்பட்டார் பிரேஸில் ஜனாதிபதி
பிரேஸிலின் ஜனாதிபதி டில்மா றூசெப் வரவு செலவுத் திட்டத்தை கையாண்டமை காரணமாக, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பிரேஸில் செனட் சபை தீர்மானித்துள்ளது.
மேலும் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை உள்ள றூசெப்பின் மிகுதிப் பதவிக் காலத்தில், இடைக்கால ஜனாதிபதியாக தற்போது பதவி வகிக்கும் மைக்கல் தெமர் செயற்படுவார்.
பிரேஸிலியச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களிடையே நிதியை நகர்த்தினார் என்பதே றூசெப் மீதான குற்றச்சாட்டாகும்.