விஷ ஊசி விவகாரம் பொய்யாம்! - சுமந்திரன்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
அத்துடன் நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமது கண்டனத்தையும் முன்வைக்கின்றேன்.
இதேவேளை வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது சிறந்த விடயமல்ல. அதேபோல் வடக்கில் பலாத்காரமாக புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.