Breaking News

தேசியத் தலைவர் கொல்லப்பட்டாரா! எதிர்பார்ப்பின் மத்தியில் "நந்திக்கடலுக்கான பாதை"



மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய "நந்திக்கடலுக்கான பாதை" என்ற நூல் தற்போது அனைவர் மத்தியிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தில் இருந்து நாளையுடன் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ (‘Road to Nandikadal’) நூல் எதிர்வரும் 6ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய இராணுவ தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிக்கட்டப் போரின் போது, 53 ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது இவரது தலைமையிலான படைப்பிரிவுடன் இடம்பெற்ற மோதலின் போதே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது.

அத்துடன், தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட யுத்தக்குற்ற மீறல்கள் உள்ளிட்டவைகளும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, நாளையுடன் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி இவரால் எழுதப்பட்டுள்ள, நந்திக்கடலுக்கான பாதை (Road to Nandikadal) என்ற நூல் வெளியிடப்படவுள்ளது.

குறித்த நூலில் இறுதிக்கட்டப் யுத்தம் தொடர்பான பல தகவல்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நூல் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.