Breaking News

உலகின் முதலிடத்தை எட்டியது லைக்கா மொபைல்



தொலைத்தொடர்பு வர்த்தகத்துறையில் Lyca mobile முதலிடத்தினைப் பெற்றுள்ளது. Rufus leonard என்ற பிரித்தானிய நிறுவனம் நடத்திய ஆய்வின் ( brand experience survey) அடிப்படையிலேயே இந்த ஸ்தானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Lyca mobile பாவனையாளர்களுடன் தொடர்புபட்ட ஐந்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் Lyca mobile வியாபார குறியீடு முதலிடம் பெற்றுள்ளது.

Lyca mobile தனது போட்டி நிறுவனங்களான Giffgaff, O2, Vodafone மற்றும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை பின்தள்ளி இந்தப் பெருமையைப் பெற்றுள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் வர்த்தக நிறுவனங்களின் வியாபார அடையாள அனுபவம் குறித்த கணிப்பில் Lyca mobile க்கு இரண்டாமிடம் வழங்கப்பட்டுள்ளது.

முதலிடத்தை சிங்கப்பூர் எயார்லைன்ஸ் பெற்ற போதிலும் உலகின் முன்னணி நிறுவனங்களான Ikea, virgin atlantic, sky ஆகியவற்றைப் புறந்தள்ளி Lyca mobile இரண்டாமிடத்தைப் பெற்றமை பெருமைக்குரியதாகும்.

குறித்த இந்தச் செய்தி பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வெளியாகும் சந்தைப்படுத்தல் சஞ்சிகையான “marketing week ” இல் வெளியாகியுள்ளது.

Lyca mobile முதன்மை இடத்தைப் பிடித்துள்ளமை குறித்து Lyca குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.