Breaking News

மௌனம் சாதித்தால் விரைவில் தமிழீழம் உருவாகும்- கம்மம்பில



அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து இனிமேலும் மௌனம் சாதித்தால் பிரிவினைவாதிகளினால் தமிமீழ எதிர்பார்ப்பை மிக விரைவில் வெற்றி கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

தூய ஹெல உறுமய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் பிரிவினைவாதத்தை யுத்தத்தினால் தோல்வியடையச் செய்ததன் பின்னர், இன்று திருட்டுத்தனமாக உலகம் முழுவதும் சென்று இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தனும், விக்னேஷ்வரனும் இந்த இராஜதந்திர யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராஜதந்திர ரீதியில் தமிழீழமொன்றை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். அரசாங்க அனுசரணையாக அமைச்சுப் பதவிகளும் இவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.