Breaking News

முதுகெலும்பு உள்ள ஜனாதிபதியே நாட்டுக்கு தேவை!- ஜாதிக ஹெல உறுமய



முதுகெலும்பு உள்ள ஜனாதிபதியே இலங்கைக்கு தற்போது அவசியம் என ஜாதிக ஹெல உறுமயதெரிவித்துள்ளது.

முதுகெலும்புடன் கூடிய பலம் பொருந்திய , ஒழுக்க நெறியுடைய தலைவர் ஒருவர்இலங்கைக்கு அவசியம்,

அவ்வாறான தலைவரை உருவாக்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்றகட்சிகள் தேவை எனவும் இந்தக் கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர்தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றிற்கு முன்னுதாரணமாக இன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி திகழ்வதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் அதிகரித்துள்ள போதையினை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பலஅதிரடி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலகநாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பும் எதிர்ப்புக் குரல்வெளியிட்டு வந்தாலும் அதற்கு செவி மடுக்காது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிமுன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பாராட்டப்பட வேண்டியது என்றும் ஓமல்பே சோபிததேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போன்ற ஜனாதிபதியே எமது நாட்டுக்கு அவசியம் என்றும்அவர் வலியுறுத்தியுள்ளார்.