லக்மன் கிரியல்லவுக்கு வந்த சத்திய சோதனை
உயர்கல்வி அமைச்சருக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விவாதம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்க்கல்வி அமைச்சர் லக்மன் கிரியல்ல நாடாளுமன்றில் உரையாற்றிய போது, சைட்டம் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கத்தினாலேயே பட்டப்படிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட பட்டப்படிப்புக்கான அங்கிகாரத்தை தம்மால் இரத்து செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறு இருக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து றாகம மருத்துவக்கல்லூரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.