எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ பூரண ஆதரவு செயலாளர் ஸ்ரீகாந்தா அறிவிப்பு
நாளை மறுதினம் 24ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண நகரில் நிகழ்வுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமது பரிபூரண ஆதரவை தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.
தமிழினத்தின் இன்றைய நிலையில் குறுகிய அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் எமது உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதில் எம்மத்தியில் வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில், அரசியல் நீதி கோரி நிற்கும் எமது மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவு “எழுக தமிழ்” பேரணிக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அணிதிரண்டு கலந்துகொண்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.