கொழும்பில் வாழும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முறையற்ற விதமாக குப்பைகள் வீசுவதை தடுக்கும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 84 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாநகர சபை, மஹரகம, தெஹிவளை, கல்கிஸை, கடுவல உள்ளிட்ட இடங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ஸ்ரீ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.