தமிழர்களே எழுந்திரு என்பது தவறு- மனோ
நல்லிணக்கத்துக்கு எதிரான சக்திகள் எங்கும் இருக்கின்றன. வட மாகாண முதலமைச்சர் ஒரு இனத்தைக் குறிப்பிட்டு எழுந்திடு எனக் கூறுவதற்குப் பதிலாக இலங்கையர்களே எழுந்திடு எனக் கூறியிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும் என இன நல்லிணக்கம் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைகளை ஒரே நாடு என்ற எண்ணக்கருவுக்குள் இருந்தே தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும் எனவும் வடக்கு முதலமைச்சர் இனவாதம் பேசுவதாக இருந்தால் அதற்கு தாம் எதிரானவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.