“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட ஒரு இனம் தான் ஈழத்தமிழினம்.
அது இனி எந்த ஒரு போராட்டத்தினைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த வேளையில் இலங்கையில் திட்டமிடப்பட்ட வகையில் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள இன அழிப்பும், தாம் இரண்டாம் தரபிஜைகளாக நடத்தப்படுவதாகவும் அதற்கான கண்முன்னே விரிந்து கிடக்கும் ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி இதற்கு காரணமான நாட்டின் அரசியலமைப்பும் மாற்றப்படு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து த.ம.பேரவை எனும் பொது அமைப்பினால் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மிகப்பெரும் ஊடக விளம்பரங்களோ பிரச்சாரங்களோ இன்றி பொது அமைப்பு ஒன்றின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தாமாகவே மக்கள் திரள் திரளாக வந்து இணைந்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் எழுந்தனர்.
பாடசாலை சமூகங்கள் இணைந்தன..
வர்த்தகர்கள் ஒருமித்த குரலில் கடைகளையடைத்து தமது அதிபூரண ஆதரவை தெரிவித்தனர்.
முதியோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களும் அனைத்து தமிழ் பேசும் மாவட்டங்களிலிருந்தும் அலையென திரண்டிருந்தனர்.
ஒரு இனத்தின் உரிமைகள் வழங்கப்படாதவிடத்து எத்தனை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினாலும் அவர்களின் போராட்டவடிவங்களை மாற்றிக்கொண்டு போராட்டம் தொடருமென்பது நிரூபணம்.
29 வருடங்களுக்கு முன்னர் ஒப்பற்ற அகிம்சை போராட்டம் ஒன்றினை நடத்தி உலகின் மனசாட்சியை உலுப்பிய அதேமண்ணிலிருந்து அதே தினத்தில் மக்கள் மீண்டும் அணிதிரண்டுள்ளது அதற்கு சான்று.
இந்த போராட்டம் நமக்கு;
வடகிழக்கு இணைப்பை தந்து விடப்போவதில்லை.
இராணுவ மற்றும் பெளத்த மயமாக்கலை நிறுத்திவிடப்போவதில்லை..
பயங்கரவாத தடைச்சட்டத்தினையோ அதனால் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் மக்களையோ விடுவிக்க போவதில்லை..
திட்டமிட்ட இன அழிப்பு ஒன்றுக்கு சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தித்தரப்போவதில்லை..
நமக்கு சுய நிர்ணயம் மற்றும் இறமை அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டித்தீர்வை பெற்றுத்தந்து விடப்போவதில்லை.
இவையனைத்தையும் மிகத்தெளிவாக உணர்ந்தும்,
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் புலனாய்வுப்படைகளின் அச்சுறுத்தல்களுக்கும் தயங்காது,
தமிழ்த்தேசிய ஊடகமாக தம்மை பறைசாற்றுபவர்களின் தவறான வழிநடத்தலையும் தாண்டி,
தாமே மக்களின் ஏகப்பிரதினிதிகளென பாராளும்ன்ற ஆசனங்களை கட்டியணைப்போரின் தடைகளையும் மீறி,
பேர் போன ஒட்டுக்குளு ஒன்றின் நேரடியான இடையூறுகளையும் தாண்டி
மக்கள் எதற்காக அணியாக திரண்டனர்.
1.அரசியல் வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான கடத்தில் நிற்பதை உணர்ந்திருக்கிறார்கள். நமக்கு தரமாட்டார்கல் என்பதற்காக நமது கோரிக்கைகளை சமரசம் செய்ய முடியாதென்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
2.தமிழ் மக்கள் ஒற்றுமைக்கு என்றுமே துணை நிற்பர். ஆனால் மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றுவிட்டு கொண்கைகளை தொலைத்து விட்டு நின்றால் அது தமிழரசுக்கட்சியாக இருந்தாலும் கேழ்வி கேட்க தயங்கமாட்டார்கள்.
3.எந்தக்காலமாயிருந்தாலும் நமது பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக சிங்கள சகோதரர்களுக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துச் சொல்லவேண்டுமென்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
4.மக்கள் உரிமைபற்றி பேசுவதை வெறுக்கிறார்கள் யுத்தம்தந்த வடுக்களால் சோர்ந்து விட்டார்கள் இனிமேல் அவர்கள் தாறது ஏதாவதை வாங்கிக்கொண்டு பேசமல் போய்விடலாமெனும் மென்வலு பேசுவோர்க்கு சாட்டையாலறைந் திருக்கிறார்கள்.
6.தமது அமைதியயும், ஒற்றுமைக்கான தேர்தல் தெரிவையும் வைத்து மக்களை முட்டாள்களாக எடைபோட நினைத்து மக்களின் மன விருப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாத தந்து விட்டு பின்னர் தான் தோன்றித்தனமான அரசியல் செய்து அதனையும் தமது ஊதுகுழல் ஊடகங்கள் மூலம் அடுத்த தேர்தலுக்கிடையில் நியாயப்படுத்தலாமென எண்ணியோர்க்கு தாம் தெளிவாக இருப்பதை உறைக்கவே சொல்லியிருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் எதனையும் தந்து விடாத இந்த போரட்டத்தில் எதற்காக மக்கள் அணி திரண்டனர்…
எத்துணை எமாற்றுக்களையும் சதிகளையும் செய்தாலும் ஒரு ஒப்பற்ற தியாகத்தை கடந்து வந்த ஒரு இனத்திடம் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டு இறுதித்தீர்வு வழங்கப்படும் வரை அவர்களது உரிமைக்குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்குமென தமது அரசியல் தலமைகளுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்துக்கும் ஒருமித்து சொல்லப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வே இந்த எழுக தமிழ். என்றும் எழுக தமிழ்..!!!a