முதலமைச்சரின் கருத்து நல்லிணக்கத்தை பாதிக்கின்றதாம் - சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், தாம் அதில் கலந்துகொள்ள வில்லையெனவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது.
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் சுமந்திரன் மேலும் கூறினார்.