ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஓமல்பே சோபித தேரர் நேற்று அறிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் 13 ஆவது தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த முடிவை அறிவித்தார்.
கட்சிக்குப் புதிய தலைவரை உருவாக்கும் நோக்கில் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், தொடர்ந்தும், ஜாதிக ஹெல உறுமயவுக்காக பணியாற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து கட்சியின் இணைத் தலைவர்களாக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவும், வண.ஹடிகல்லே விமலசார தேரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கட்சியின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.