Breaking News

இலங்கை ஜனாதிபதியின் கருத்தை இந்திய மீனவர்கள் வரவேற்பு! கச்சதீவில் மீனவர்கள் விரட்டியடிப்பு!



மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தமையை இந்திய தேசிய கடற்தொழிலாளர் பேரவை வரவேற்றுள்ளது.

இந்திய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதிஅமெரிக்கா சென்றிருந்தார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகத்தில் இந்திய வெளியுறவு துறை இணைஅமைச்சர் அக்பரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போதே இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில்தீர்வு எட்டப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவு பகுதியில் இருந்து இந்திய மீனவர்கள் விரட்டியக்கப்பட்டனர்

இலங்கை கச்சத்தீவு கடற்பிரதேசத்தில் தொழிலில் ஈடுப்பட்ட சுமார் 200 இந்தியகடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாக தெ இந்தியன்எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களே விரட்டியடிக்கப்பட்டவர்களாவர்.

50க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இலங்கைப்படையினரால் தாம் விரட்டியடிக்கப்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்துள்ளதாக இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்க தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.