Breaking News

தாய்க்கு, நல்ல தாய் எனக் கூறத் தேவையில்லை- மஹிந்த விளக்கம்



சுயாதீனம் என்ற சொல் தேர்தல்கள் ஆணைக்கு ழுவில் சேர்க்கப்படவில்லை. அச்சொல்லை சேர்க்காமல் இருப்பதனால் அது சுயாதீனமானது அல்ல எனக் கருதுவது தவறானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைக்கக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுயாதீனம் என்ற சொல்லைச் சேர்க்காத ஏனைய ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுயாதீனமாக செயற்படுவதில்லை என்பத கருத்தல்ல. தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணிவதில்லை. அது சுயாதீனமாக செயற்படுகின்றது. சுயாதீனம் என்ற சொல் தான் அதன் செயற்பாட்டைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு அச்சொல்லை வைத்து யாராவது விளக்கம் கொடுப்பதாயின் குறுகிய நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.

யாராவது ஒருவர் தனது தாயை நல்ல தாய் என்று கூறவேண்டுமா? அவ்வாறு, நல்ல என்ற சொல்லை சேர்க்காது தாய் என யாராவது கூறினால், அந்த தாய் கெட்டவள் என்று அர்த்தம் கொடுப்பது தவறானது எனவும் மஹிந்த தேசப்பிரிய விளக்கிக் கூறினார்.