Breaking News

பான் கீ மூனின் மருமகன் சடர்ஜி இலங்கையில் ஒரு போர்க் குற்றவாளி?



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மருமகனான முன்னாள் மேஜர் சித்தார்த் சடர்ஜி என்பவருக்கு எதிராக இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த இந்திய சமாதான படையின் விசேட அதிரடிப்படை மேஜராக பணியாற்றியுள்ளார். இவர் அப்போது கொலை செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்களுடன் இருந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் அமெரிக்காவில் வெளிவரும் இனர்சிட்டி பிரஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் தனது மருமகனான சடர்ஜியை கென்யாவின் ஐக்கிய நாடுகளுக்கான பொறுப்பாளராக பான் கீ மூன் நியமனம் செய்துள்ளார்.

மேஜர் சடர்ஜி இலங்கையில் இருந்த காலத்தில், யாழ். வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்கள் பலரின் கொலையுடனும் தொடர்புபடுகின்றார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

1987 ஒக்டோபர் 22 ஆம் திகதி யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய சமாதானப் படையினர் வைத்தியர்கள் உட்பட 60 பேரை கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது எனவும் இன்றைய தேசிய சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.