Breaking News

ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிப்பணிந்தார் ஜனாதிபதி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் எனவும் அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வீழ்த்த பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என கூட்டு எதிரணியின் உறுப்பினரும் பாரளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையினால்தான் ஆட்சி பீடமேற சம்மதித்தேன் எனவும் கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை தவிர்த்தேன் என ஜனாதிபதி கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

என். ஏம் பெரேரா மன்டபத்தில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2020ஆம் ஆண்டுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது வேடிக்கையாகவுள்ளது. எமது கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கிலேயே அவர் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிருந்தார். 

பின்னர் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப்பொறுப்பேற்றும் அவரது செயற்பாடுகளையும் கட்சிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் அவதானித்தோம். 6 மாத்திற்கு பின்னர் கட்சியின் கொள்கைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தீர்மானித்த பின்னரே நாம் தனித்து செயற்பட ஆரம்பித்தோம். ஆனாலும் நாம் கட்சியின் கொள்கைகளை தொடர்ந்து பேணிவருகின்றோம்.

நாம் குறித்த காலப்பகுதியில் கட்சிக்குள் செயற்படும் போதுதான் கட்சியை இரண்டாக பிரித்தது யார் என்பதை அறிந்துக்கொண்டோம். அதேபோன்றே உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டங்களில் உள்ள கட்சி பிரதானிகளை மாற்றி விட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அக்காலப்பகுதியில் கட்சியின் செயளாளர், உபதலைவர் போன்ற பதவிகளை மாற்றியது யார்? இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தினார்.

நாம் கட்சிக்கு பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். கட்சியின் கொள்கைகளை தாரைவார்க்கும் எந்தவொரு செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட மாட்டோம் என்பதை பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீட மேற்ற வைத்தது ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழரசு கட்சியும் விடுதலைப்புலிகளும் என்பதை நான் கூறி அறிய வேண்டியதில்லை. சர்வதேசத்துக்கு அடிப்பணிந்து புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காகNவும் காட்டிக்கொடுக்கும் வேலையின் மூலமாகவே அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூலமே அடுத்த ஆட்சி அமையும் என்பது உண்மை ஆனால் அது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை கடைப்பிடிக்கும் பொருளாதாரத்தை வளுப்படுத்தும், தேசிய தலைவரான மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும். கட்சியின் பலத்தை கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மூலம் கண்டிருப்பார்கள் என் நினைக்கின்றேன் என்றார்.