Breaking News

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை தீவிரம்



வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவில் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கும், வெள்ளிக்கிழமை மன்னாரில் காலை 8.00 மணிக்கும், வவுனியாவில் பகல் 01.00 மணிக்கும், கிளிநொச்சி மாலை 4.00 மணிக்கும் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, யாழ்ப்பாண வைத்தியசாலையில் இவ்வாரம் மருத்துவ பரிசோதனை நடைபெறமாட்டாது எனவும், எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுமெனவும் சுகாதார அமைச்சரின் ஊடக செய்தி குறிப்பில் மேலும், குறிப்பிடபட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி செலுத்தப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குறித்த மருத்துவ பரிசோதனைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.