சர்வதேச கைதிகள் தினம் ; யாழ்ப்பாணத்தில் போராட்டம்
சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் துண்டுப் பிரசுர விநியோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைகப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.
ஸ்ரீலங்காவில் உள்நாட்டு ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.