Breaking News

மஹிந்தவை சரமாரியாக துவைத்தெடுத்த ரணில்!

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். அவை தேசத்துரோக செயல்கள் அல்ல.


நான் தேசத்துராகியாக ஒருபோதும் செயற்படப்பேவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார்.

தனது தேர்தல் வெற்றிக்காக விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இன மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது. தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளோம்.

அதற்காக பல்வேறு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளோம். ஆனால் இவை எதுவும் தேசத் துரோக செயல்கள் அல்ல. தேசத் துரோகியாக நான் செயற்படபோவதில்லை.  தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக விடுதலைப்புலிகளுக்கு பணத்தைக் கொடுத்து நான் துரோகியாகவில்லை.

அவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் பிரபாகரனுக்கு பணத்தைக் கொடுத்து வெற்றி பெறுவதை விட தோல்வியே எனக்கு மேலானது என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், சி.விகுணரட்னம் போன்றவர்களை படுகொலை செய்த விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றவர் தேசத்துரோகியா? அதனை நிராகரித்த நான் தேசத்துரோகியா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

அதேபோன்று நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தனது தந்தையின் ஆரம்ப அரசியல் கட்சியுடன் இணைந்து பயணிக்கின்ற ஒப்பந்தத்தை மேற்கொள்வது தேசத்துரோகமா? இல்லை தமது குடும்பத்திற்காகவும் தனிப்பட்ட நலன்களுக்காகவும் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றமை தேசத்துரோகமா? என்பதையும் மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றார்.