Breaking News

மலேசிய உயர் ஸ்தானிகர் அன்சார் மீது தாக்குதல்



மலேசியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது எல்.ரி.ரி.ஈ. புலம்பெயர் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவுக்கு சென்றுள்ள கூட்டு எதிர்க் கட்சியின் தூதுக்குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுடன் அந்நாட்டின் விமான நிலையத்துக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் உயர் ஸ்தானிகர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மலேசியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களாக தொடர்ந்தேர்ச்சியாக புலம்பெயர் புலி ஆதரவாளர்களினால் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவிருந்த விகாரையொன்றின் மீதும் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மலேசியாவுக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார், கடந்த 2013 ஏப்றல் மாதம் 29 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.