Breaking News

“இராணுவத்தை குறைக்குமாறும் காணிகளை விடுவிக்குமாறும் பான் கீ மூன் கோரினார்”



வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும் பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்
பான் கீ மூன் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அதேநேரம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்குமாறும் பான் கீ மூன் கோரினார் என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் பான் கீ மூன் கோரினார். மேலும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை அவர் பாராட்டியமையும் விஷேட அம்சமாகும் என்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலஙகை விஜயத்தின்போது வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும் பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் வடக்கு ஆளுநருடன் பேசப்பட்டதா என வினவியபோதே ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.