கச்சதீவில் இந்துக்கோயில் அமைக்கப்படவேண்டும் :கூட்டமைப்பு
கச்சதீவில் இந்து ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர் இந்த கோரிக்கைக்கு தமிழ் அமைப்புக்களும் ஆதரவை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை காட்டிலும் தற்போதைய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சிறந்த முறையில் தமிழர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் தேவை என்றும் அவர் கேட்டுள்ளார்.