Breaking News

நாட்டின் சமாதானத்துக்கு இளைஞர்களின் ஆதரவு முக்கியமானது – பான் கீ மூன்



இலங்கையில் சமாதானத்தை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்குதாரர்கள் இந்நாட்டின் இளைஞர்கள் என முக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயலாளர் நாயகம் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இந்நாட்டின் இளைஞர்களுக்கு பாரிய பங்களிப்பு செய்ய சந்தர்ப்பம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, தேய்ச்ய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க காரியாலயம் மற்றும் ஐக்கிய நடுகல் சபையின் இலங்கை காரியாலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.