தமிழ் அமைப்புக்கள் அரசிற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும்: விக்ரமபாகு
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் தொடர்பில் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மாறாக இந்த அலுவலகம் மூலம் எதுவும் இடம்பெறாது என தெரிவித்து அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நவசமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல்போனோர் தொடர்பாக கண்டறிய அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இந்த அலுவலகம் மூலம் காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை அறியலாம். இது அரசாங்கத்தின் தேவைக்காக அமைக்கப்பட்டதொன்றல்ல. மக்களின் தேவைக்காக அமைக்கப்பட்டதாகும். அத்துடன் இந்த காரியாலயத்துக்கு தேவை ஏற்படின் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த காரியாலயத்தின்மூலம் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக இந்த காரியாலயம் மூலம் எதுவும் இடம்பெறாது என தெரிவித்து அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்றார்.