ஐ.ம.சு.முவுடன் இணைந்து போட்டியிட போகின்றதாக கூட்டமைப்பு?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
பிட்டகோட்டை பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களிடம் அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் இசுறு தேவப்பிரிய இதன்போது குறிப்பிட்டுள்ளார். இது ஒரு முன்னேற்றகரமான விடயமென்றும் நாட்டில் நடைபெறவேண்டிய விடயமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கூட்டாக பல கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எதிர்பார்க்கப்படாத பல கட்சிகள் இணையவுள்ளதாக குறிப்பிட்டார்.