Breaking News

கல்முனையில் நில நடுக்கம்



கல்முனையில் இரவு 09:15 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தின் போது வீட்டுக்குள் சிறு சேதாரங்களும், நில வெடிப்புகளையும் காணக் கூடியதாக இருந்தது.

கல்முனை பகுதியில் ஏற்பட்ட சிறு நில நடுக்கம் காரணமாக சற்று பதட்டமான சூழ் நிலை நிலவியதாக எமது செய்தியாளர் கூறினார். மேலும், குறித்த இடத்திற்கு பொலிஸார் பொது மக்களும் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொயாம்பமா நகரின் வடக்கே 50 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது 6.1 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிலும் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.