Breaking News

புலி சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது ஆபத்து

விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென யாழ்ப்பாண பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது..


அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இதற்கு முன்னர் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றிய அனந்தராசா என்ற தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் தப்பிச் சென்றதாகவும், இதுவரையில் அவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய மற்றும் லயன் எயார் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி 55 பேரை கொன்ற புலி உறுப்பினர்களே அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை யொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது