“ட்ரோன்” கெமரா அனுப்பியவர் யார்? தகவல் வெளியாகின..!!
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் நேற்று பொரளை பொது மயானத்திலிருந்து பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
இதன்போதும் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்ப உறுப்பினர்களின் உருக்கமான வேண்டுகோளுக்கு இணங்க சடலம் தோண்டியெடுக்கப்படும் இடத்துக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் லசந்தவின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோள் அவர்களது உரிமை. அதனை மதிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
இந்நிலையில் சடலம் தோண்டியெடுக்கப்படும் இடத்துக்கு மேலால் ஆகாயத்தில் இருந்தும் படம் பிடிக்கும் “ட்ரோன்” கெமரா ஒன்று திடீர் என பறந்து வந்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தத்து. இதனை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டபோதும் “ட்ரோன்” கெமராவை அனுப்பியவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் குறித்த “ட்ரோன்” கெமராவை அனுப்பியவர்கள் தொடர்பில் தற்போழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து இயங்கும் “அனைவருக்கும் மேலால் இருந்து செய்திகளை வழங்கும்” என மார்தட்டிக்கொள்ளும் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றே இந்த “ட்ரோன்” கெமராவை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த செய்தி நிறுவனத்தின் துப்பறியும் செய்திகளுக்கு பொறுப்பான ஊடகவியலாளரே இந்த வேளையில் ஈடுபட்டதாக ஊடாகவியாளர் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
“அனைவருக்கும் மேலால் இருந்து செய்திகளை வழங்கும்” என்பது இது போன்ற கீழ்த்தரமான செயல்களினால் அல்ல, மாறாக ஊடக தர்மத்தை பாதுகாத்து செய்தி வெளியிடுவதன் மூலம் என்பதை சாதாரண பொதுமக்களும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஊடகங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதாயின், ஊடக ஒழுங்குமுறையை உடனடியாக செயற்படுத்துவதது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் கருத்தாக இருக்கின்றது.