தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் புதிய சவால்கள் தொடர்பாகவே இந்தக். கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஏனைய அமைச்சுக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வது குறித்து இந்த நீண்ட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி, மற்றும் முப்படைகளின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலர்களும் கலந்து கொண்டனர்.