Breaking News

விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும் - மஹிந்த ஆதங்கம்



வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசியலமைப்பு என்ற போர்வையில் நாடு பிரிக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை தென்மாகாண முதலமைச்சரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ வெளியிட்டிருந்தால் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

எனினும், வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக இதுவரை எந்தவித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்