Breaking News

விக்னேஷ்வரனுக்கு தேவையானதை அரசு வழங்காது – ரஞ்சன்



விக்னேஷ்வரன் கூறுவது போன்றெல்லாம் இந்த அரசு எதுவும் வழங்குவதில்லை என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தேடுகின்ற பொழுது முதலமைச்சர் விக்னேஷ்வரன் பிரபலமாவதற்கு மக்களை சேர்த்து பல வேலைகள் செய்துவருவதாக ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்தார்.

அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஷ்வரன் மேற்கொண்ட செயற்பாட்டை தான் ஏற்றுக்கொள்வதில்லை என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.