Breaking News

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தடையை நீக்க முடியாது – மங்கள



ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

‘விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது’ என அமைச்சர மங்கள நியூயோர்க்கின் வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றுள்ள அமைச்சர் மங்கள, இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

கூடுமானவரை புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பியா நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்